Pages

Friday, October 14, 2011

ஷாரூக்கானை இயக்கப்போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

கஜினி படம் ரிலீஸ் ஆகி கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்துக் கொண்டிருந்த நேரத்தில், தனது பழைய டி.வி.எஸ். 50யில் பயணித்த எளிமையான டைரக்டரான ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் முன்னணி நடிகரான ஷாரூக்கானை இயக்கப்போகிறார். கஜினியை இந்தியிலும் இயக்கி வெற்றி பெற்ற முருகதாஸ்க்கு, அதற்கு பிறகு பாலிவுட்டில் மிகப்பெரிய மார்க்கெட் உருவானது. அவர் அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர் வடஇந்திய ரசிகர்கள்.

தற்போது ஏழாம் அறிவு படத்தை முடித்த கையோடு, விஜய்யை வைத்து தமிழில் புதிய படத்தை இயக்கும் பணிகளில் பிஸியாக இருக்கும் முருகதாஸ், அதற்கு பிறகு ஒரு இந்திப் படத்தை இயக்கப்போகிறாராம். அவர் இயக்கும் புதிய இந்திப் படத்தின் ஹீரோவாக நடிகர் ஷாரூக் கான் நடிக்கிறார். இத்தகவலை ஷாரூக் கானே தெரிவித்துள்ளார். அவரிடம் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மையா என்று கேட்டதற்கு, ஏ ஆர் முருகதாஸ் எனக்கு இரு கதைகள் சொல்லியுள்ளார். இரண்டிலுமே நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்த இரண்டில் எந்த ஸ்கிரிப்ட் முதலில் தயாராகிறதோ அதில் நடிப்பேன், என்றார்.

0 comments:

Post a Comment