நயன்தாரா – – பிரபுதேவா திருமணம் மும்பையில் நடக்கவிருக்கிறது. தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
சினிமாவில் நடன கலைஞராக நுழைந்து, கதாநாயகன், இயக்குனராக உயர்ந்த பிரபுதேவாவுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பிரபுதேவா தனது மனைவி ரம்லத்திடம் இருந்து விவாகரத்து பெற்றார்.இதையடுத்து, நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள பிரபுதேவாவுக்கு இருந்த சிக்கல் நீங்கியது.பிரபுதேவா-நயன்தாரா திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. திருமணத்தை எங்கு வைத்துக் கொள்வது என்பதில் இருவருக்கும் குழப்பம் இருந்து வந்தது.. கேரளாவில் திருமணத்தை நடத்த முதலில் திட்டமிட்டனர். பின்னர், ஐதராபாத் அல்லது சென்னையில் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.இப்போது, பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது திருமணத்தை மும்பையில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். தேவையில்லாத தொல்லைகளையும், சங்கடங்களையும் தவிர்க்கவே, அவர் கள் மும்பையை தேர்ந்து எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நயன்தாரா ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை. கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்த உடன், இவர்களது திருமணம் நடைபெறும். தங்களது திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா உலக பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment