விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதனால்தான் நடிக்காமல் இருக்கிறேன் என்றும் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.. “நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்.. நடிப்புக்கு முழுக்குப் போடுகிறேன் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.. தொடர்ந்து சினிமாவில் நடிக்கிறேன்.
நான் கடவுள் படத்துக்குப் பிறகு நல்ல படங்கள், நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். 15க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். எதிர்பார்ப்புக்கேற்ற கதைகள் அமையாததாலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் புதிய படங்களில் நடிக்கவில்லை. கல்யாணமும் இல்லை… குடித்தனமும் இல்லை.. தொடர்ந்து நடிப்பேன். வருகிற ஜூன் மாதத்திலிருந்து புதிய படங்களில் நடிக்கிறேன்.
என் பெற்றோருக்கு வயதாகிவிட்டது. என்னோட பாட்டிக்கு 90 வயது. நான்தான் அவர்களை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். வேலைக்காரர்கள் முகம் சுளிக்கும் வேலைகளை நாம் தான் செய்ய வேண்டும் என்பதால் தற்காலிக ஓய்வு தந்துவிட்டு, அவர்களை கவனித்துக் கொள்கிறேன். என்னதான் பிரபலம் ஆனாலும் நம்மை வளர்த்தவர்கள் முக்கியம். அவர்கள் நம்மை வளர்க்க எப்படி கடமைப்பட்டிருந்தார்களோ…அதேபோல் அவர்களை பாதுகாக்க எனக்கு கடமை இருக்கிறது..
நான் இன்னும் பெங்களூரில் வரிசையில் நின்றுதான் எலெக்ட்ரிக் பில், வீட்டு வரியெல்லாம் கட்டுறேன்.. ஆட்டோவில் தான் போகிறேன்… எனக்கென சில நடைமுறைகள் வைத்திருக்கிறேன். அதை கடைப்பிடித்து வாழ்கிறேன். அதேபோல் எனது பெற்றோருக்கு கட்டுப்படுவதும், என் பாட்டிக்கு அருகிலிருப்பதும் என் கடமை…என் தந்தை எனக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பியது உண்மை. அவரின் ஆசை அது.. ஜூன் மாதம் வரை மாப்பிள்ளை பார்க்க அவர்களுக்கு சில கண்டிஷன்களோடு மதிப்பளித்து ஒப்புக் கொண்டேன் அல்லது நான் நடிக்க எந்த தடையும் சொல்லக்கூடாது என கேட்டுக்கொண்டேன்.. அவரும் அதற்கு உடன்பட்டார்..
ஆனால் எனக்கு தெரியும் என் கண்டிஷன்களுக்குள் அவரால் மாப்பிள்ளை தேட முடியாது என்று.. இதை சமீபத்தில் அவரே ஒப்புக்கொண்டார்… இருந்தும் அவருக்கு கொடுத்த காலத்திற்காக காத்திருக்கிறேன். ஜூனுக்குப் பிறகு நடிப்பைத் தொடரப் போகிறேன்.
முழுமையாக புரிந்துகொள்ளாமல், நான் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. இது என் வாழ்க்கையோடு விளையாடுவதற்குச் சமம்…” எனவே , நான் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக வந்த செய்தியை நம்ப வேண்டாம்..
தற்போது சுதா இயக்கும் துரோகி படத்தில் நட்புக்காக நடித்திருக்கிறேன்.. விரைவில் புதிய படத்தில் நடிக்கிறேன்.
0 comments:
Post a Comment