Pages

Friday, October 14, 2011

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நுகர்வோர்சாதனங்கள் விற்பனைசூடுபிடிக்கிறது: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நுகர்வோர்சாதனங்கள் விற்பனை சூடு பிடித்துள் ளது.இத்துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், கடந்த 10-12 நாட்களாக, விற்பனை அதிகரித்துள்ள தாக தெரி வித்துள்ளன.பண்டிகையையொட்டி, நுகர்வோர் சாதனங்களுக்கு சிறப்புசலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், விற்பனை அதிகரித்துள்ளதாக எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஒய்.வி.வர்மா தெரிவித்தார்.
இரண்டாவது இடம்: இந்தியாவில் நுகர்வோர்சாதனங்கள் விற்பனையில் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், கொரியாவை சேர்ந்தசாம்சங் நிறுவனம் உள்ளது. இந் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், " சென்ற செப்டம்பர் மாதம் 28ம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. அது முதல் விற்பனை நன்றாக உள்ளது. இது தீபாவளி வரை தொடரும்' என்றார். எனினும், சென்ற ஆண்டை விட, இவ்வாண்டு தீபாவளி விற்பனை குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை வளர்ச்சி 40சதவீதமாக இருந்தது.இது, இவ்வாண்டு 10 -15சதவீதம் குறைந்து 25 -30சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கு: விற்பனை வளர்ச்சி குறையும் என்று மதிப்பிட்டுள்ள போதிலும், நுகர்வோர்கள் அதிக அளவில்சாதனங்களை வாங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என, வீட்டு வசதிசாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் விர்ல்பூல் நிறுவனத்தின் துணை தலைவர் சாந்தனு தாஸ்குப்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தீபாவளி விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்' என்று கூறினார். தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், நுகர்வோர்சாதன தயாரிப்பு நிறுவனங்கள், வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாக விளம்பரங்களுக்கு செலவிடுகின்றன.பொதுவாக, நுகர்வோர் சாதன நிறுவனங்கள், ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் விற்பனையில், 4.5சதவீதத்தை விளம்பரங்களுக்காக செலவிடுகின்றன. இது, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் 8-9சதவீதம் என்ற அளவிற்குஅதிகரிக்கும்.
இலவச பரிசுகள்: அந்த வகையில், இவ்வாண்டு தீபாவளியையொட்டி பல்வேறு நிறுவனங்கள், அதிகளவில் விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. மேலும், பல்வேறுசலுகைத் திட்டங்கள், இலவச பரி”கள், ரொக்கத் தள்ளுபடி உள்ளிட்டவற்றையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.இதன்படி,சாம்சங் மற்றும் விர்ல்பூல் நிறுவனங்கள், தீபாவளியையொட்டி 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்குகின்றன.
சோனி இந்தியா நிறுவனமும், அதன் பிரேவியா டிவி, வையோ லேப்-டாப் உள்ளிட்டசாதனங்களை வாங்குவோருக்கு பல்வேறு தள்ளுபடி திட்டங் களையும், பரி”ப் பொருட்களை வழங்குகிறது. இதற்காக இந்நிறுவனம் 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனம், அதன் விற்பனையை அதிகரிக்கும்நோக்கில், நடிகர் ஷாருக்கானின் "ரா.ஒன்' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
" தீபாவளிச்சலுகையை குறி வைத்து, பலர் புதியசாதனங்களை வாங்கும் முடிவை தள்ளி வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களின் கவனத்தை கவரும் வகையில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு "ரா ஒன்' திரைப்பட ஒப்பந்தம் கைகொடுக்கும்' என கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் துணை தலைவர்(விற்பனை -சந்தைப்படுத்துதல்) கமல் நந்தி தெரிவித்தார். நுகர்வோர்சாதனங்கள் வாங்க, பல்வேறு நிதி நிறுவனங்கள் கவர்ச்சிகர மான வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன.இதன் காரணமாகவும், ஏராளமானோர், பழைய "டிவி' போன்றசாதனங்களை விற்று விட்டு, மேம்பட்ட தொழில் நுட்பத்திலான புதியசாதனங்களை வாங்கி வருகின்றனர். பல நிறுவனங்கள், நுகார்வோர்சாதன கடன்களுக்கான வட்டியை ஏற்றுக் கொள்கின்றன. இதுவும், நுகர்வோர்சாதனங்களின் விற்பனையை அதிகரிக்க துணை புரிந்து வருகிறது.
அசல் மட்டும்: சோனி இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் சுனில் நய்யார் கூறுகையில்," நிறுவனம், வட்டித் தொகையை ஏற்றுக் கொள்கிறது. 6-8 மாத தவணையில் அசலை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதும்' என்று தெரிவித்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கடன் அடிப்படையிலான நுகர்வோர்சாதனங்களின் விற்பனை 2-3 சதவீதத்தில் இருந்து 7-8சதவீதமாக உயர்ந்துள்ளது. சோனி போன்ற நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 10-15சதவீதம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment