Pages

Friday, October 14, 2011

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

தமிழ் மட்டுமல்லாது ஆந்திராவிலும் சக்கபோடு போட்ட படம் காஞ்சனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ரசிக்கவும், மிரட்டவும் செய்த இப்படத்தை, சமீபத்தில் அஜித் பார்த்தாராம். பார்த்தமட்டில் அ‌சந்தே போய்விட்டாராம். உடனே லாரன்ஸின் உதவியாளரை போனில் தொடர்பு ‌கொண்டு நான் உடனே லாரன்சை பார்க்கணும் என்று கூறியுள்ளார். அஜித்தின் அழைப்பை ஏற்று லாரன்ஸூம் உடனே அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். இந்தபடத்தின் திரைக்கதை ரொம்பவே தன்னை கவர்ந்துவிட்டதாவும், படம் ரொம்பவே சூப்பராக வந்திருப்பதாகவும் லாரன்ஸை வெகுவாக பாராட்டினாராம் அஜித். அப்படியே எனக்கும் ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க, நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஒருபடம் பண்ணலாம் என்று கூறினாராம். அநேகமாக பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித், லாரன்ஸ் படத்தில் நடித்தாலும் நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment