தமிழ்நாட்டுக்குள்ள லாட்டரிச் சீட்டு ஒழிச்சு ரொம்ப நாளாச்சு. உண்மைதான். ஆனா பஞ்சாபில் குலுக்கின பம்பர் பரிசு தமிழ்நாட்டுக்கு கிடைச்சதுதான் ஆச்சரியம். அது நம்ம டாப்ஸிதான். தினமும் பால் நிலாவை கரைச்சு பாதம் வரைக்கும் ஊற்றிக் குளிப்பார்போல. கொஞ்ச நாளா லைட்மேன்களுக்கே லைட் அடிக்கிற நிறத்தில் மெருகேறித் தெரிகிறார் டாப்ஸி. 'வந்தான் வென்றான்' ஷூட்டிங்கில் இருந்தவருடன் ஒரு நக்கல் சந்திப்பு.
அதென்ன இப்படி ஒரு நிறம். கரண்ட் கட் ஆனால்கூட உங்க வெளிச்சத்திலேயே இருக்கலாம்போல?
அது எங்க ஃபேமிலி ஜீன்ஸ் பாஸ். உடனே கிளியோபாட்ரா மாதிரி கழுதைப் பாலில் குளிப்பேன்னு கிசுகிசு போட்றாதீங்க. இந்தப் படம் முடியறதுக்குள்ள டைரக்டர் என்னை பல தடவை குளிக்க வெச்சுட்டார். ரீ டேக்தான் பாஸ். கர்நாடகாவில் 60 அடி உயர அருவி. எனக்கு தண்ணீர் என்றாலே பயம். நீச்சல் வேற தெரியாது. அங்க குளிக்கச் சொன்னப்ப எங்க அம்மாவுக்கு போன் போட்டு அழுதிட்டேன்.
படிக்கும்போது 'ஐ லவ் யூ' சொன்னவங்களை மறந்துட்டீங்களாமே...?
ஐயோ, ஜாலியான நாட்கள் அது. நிறைய பசங்க ப்ரபோஸ் பண்ணியிருக்காங்க. ஆனா நான் எதையும் சீரியஸாக எடுத்துக்கறதில்ல.
இப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல யாராவது அப்படி அப்ளிகேஷன் போட்டிருக்காங்களா...?
அதையேன் கேட்குறீங்க. எங்க ஷூட்டிங் போனாலும் ஒரு ஆள் தொடர்ந்து வந்து என்னை கவனிச்சான். நான் பயந்துபோய் டைரக்டர் கண்ணன் சார்கிட்டே சொன்னேன். அவர் ஒரு ஐடியா சொன்னார். அந்த ஆளைக் கூப்பிட்டு 'அண்ணா என்ன வேணும்'ன்னு கேட்கச் சொன்னார். அப்படி கூப்பிட்டதும் ஆள் எஸ்கேப் ஆயிட்டார்.
'வந்தான் வென்றான்' படப்பிடிப்பு முடிஞ்சு போச்சு. ஷூட்டிங் அனுபவம் எப்படி?
ஜாலியான காதல் கதைன்னு எனக்குச் சொன்னாங்க. ஆனால் நான் நடிச்சது பாதிக்கு மேல த்ரில்லர் சீன்தான். கோவாவில் 250 அடி உயர கோட்டை மேல ஏறச் சொன்னாங்க. ஏறிப் பார்த்தால் ஆளே எறும்பு மாதிரி தெரிஞ்சாங்க. 'அப்படியே ஒரு டான்ஸ் ஆடுமா'ன்னு சொன்னப்ப எனக்கு மயக்கமே வந்திடுச்சு. நடிகைனா எவ்வளவு கஷ்டம் பாருங்க என்கிறார்.
0 comments:
Post a Comment